கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த போலி மந்திரவாதி ‘ஷாபி’. இவர் தனது மனைவியின் செல்போனில் இருந்து சமூக வலைதளத்தில் ஸ்ரீதேவி என்கிற பெயரில் போலி கணக்கு ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக மருத்துவர் ‘பகவல்சிங்’ தொடர்பு கிடைத்துளைத்து. மருத்துவர் பகவல்சிங்கும் அவரது மனைவி லைலாவும் போலி மந்திரவாதி ஷாபியின் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

அந்த தம்பதிகள் போலி மந்திரவாதி ‘ஷாபி’ விடம் இளமையாக இருக்கவும், பணக்காரராக வேண்டும் என்றும் தங்களின் ஆசையை கூறி இருக்கிறார்கள். அதற்கு நரபலி கொடுத்தால் நீங்கள் நினைத்தது நடக்கும் என்று சொல்லி நம்ப வைத்திருக்கிறார் ஷாபி. இதை அடுத்து கடந்த ஜூன் மாதத்தில் எட்டாம் தேதி அன்று எர்ணாகுளத்தில் காலடி பகுதியில் லாட்டரி விற்று வந்த ரோஸ்லின் என்ற பெண்ணை ஆசை வார்த்தைகள் சொல்லி அழைத்துச் சென்று நரபலி கொடுத்திருக்கிறார்கள். அதன் பின்னர் கடந்த மாதம் 26 ஆம் தேதி அன்று எர்ணாகுளத்தில் லாட்டரி சீட்டு விட்டு வந்த தர்மபுரியை சேர்ந்த பத்மா என்கிற பெண்ணையும் ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றி அழைத்துச் சென்று நரபலி கொடுத்திருக்கிறார்கள். பின்னர் உடலை 56 துண்டுகளாக வெட்டி இருக்கிறார்கள். உடலில் சில பாகங்களை சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள்.
இந்த நரபலி சம்பவம் கேரள மாநிலத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த வழக்கில் ஷாபி, பகவல் சிங் , லைலா உள்ளிட்ட மூணு பேரை 12 நாட்கள் போலீஸ் காவளில் வைத்து விசாரணை நடத்த எர்ணாகுளம் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது .

பகவல்சிங் வீட்டிற்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி உள்ளார். மோப்பநாய் கொண்டு ஆய்வு நடத்திய போது வீட்டின் பின்புறம் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலும் ஆய்வு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள் . சோதனையின் போது நரபலி கொடுத்து வந்தபகவல் சிங் வீட்டின் பிரிட்ஜில் இருந்து 10 கிலோ மனித இறைச்சி மற்றும் எலும்பு துண்டுகளை கைப்பற்றி உள்ளனர்.

தொடர்ந்து பகவல்சிங் வீட்டை சுற்றி சோதனை நடந்து வருகிறது. இந்த நிலையில் நரபலி கொடுக்கப்பட்ட இடத்தை சுற்றி இருக்கும் பகுதிகளில் இதுவரைக்கும் 26 பெண்கள் காணாமல் போய் இருப்பது தெரியவந்திருக்கிறது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 14 பெண்களும் பத்தனம் திட்டா மாவட்டத்தில் 12 பெண்களும் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களும் இந்த கும்பலால் நரபலி கொடுக்கப்பட்டு இருப்பார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் எர்ணாகுளம் மற்றும் பட்டணம் தீட்டா பகுதிகளில் பதற்றம் இருந்து வருகிறது.