நடிகை அனுஷ்கா அரிய நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. அனுஷ்கா ஷெட்டிக்கு சிரிப்பு வரும் போது எல்லாம் அவர் 20 நிமிடங்கள் சிரித்துக் கொண்டே இருப்பார். இது அரிதான நோய் என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது. மேலும், இந்த செய்தியை அனுஷ்கா ஒரு தமிழ் பேட்டியில் தெரிவித்தது இருப்பதாக சொல்லி வைரலாகி வருகிறது. ஆனால் இதில் உண்மை இல்லை, இதில் உள்ள உண்மை குறித்து அனுஷ்காவே வெளியில் வந்து விளக்கம் அளித்தால், இந்த செய்தி நிச்சயம் உடைந்து விடும் என அனுஷ்காவின் நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர்.
