தமிழ் சினிமாவில் டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள பிரமாண்ட படம் ‘கோப்ரா’. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கே ஜி எப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.
கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் ‘கோப்ரா’ வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகவுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் கோப்ரா படம் குறித்து ஒரு செம அப்டேட் கொடுத்துள்ளார் .
அது என்னவென்றால் பியானோவின் புகைப்படத்தை வெளியிட்டு ” கோப்ரா” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் அர்த்தம் படத்தின் பின்னணி இசை இறுதி கட்டத்தில் உள்ளது என்பதை நம்மால் உணர முடிகிறது . இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆகி அவருகிறது.
Cobra 🐍 pic.twitter.com/cGk5NN3PCi
— A.R.Rahman (@arrahman) August 3, 2022