ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக மலர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 30 ஆண்டுகளாக தன் மாயாஜால இசையால் ரசிகர்களை ஈர்த்து வருகின்றார். இந்திய மொழிகளை தாண்டி பல மொழிகளில் பணியாற்றிவரும் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் அண்மையில் தமிழில் ‘கோப்ரா’, ‘வெந்து தணிந்தது காடு’ படங்கள் வெளியானது.
இந்த படங்களில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்டது. மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.இந்தப்படம் வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படங்களுக்கு இசையமைப்பதுடன் நேரடி இசை கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். அண்மையில் கனடா நாட்டிற்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்திவிட்டு இந்தியா திரும்பினார் ஏ.ஆர். ரஹ்மான்.இந்நிலையில் சீக்ரெட் ஆப் சக்சஸ் என்ற பெயரில் மலேசியாவின் கோலாலம்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி ஏ. ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
#ARRahman's MALAYSIA concert – 10000 tickets have been SOLD OUT in just 11 minutes, setting a new record in Malaysia! 🔥
— George (@VijayIsMyLife) September 19, 2022
The concert will take place on January 28, 2023! @arrahman pic.twitter.com/yREQ2E66za
டி.எம்.ஓய். கிரியேஷன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சிக்கான 10,000 டிக்கெட்டுகளும் 11 நிமிடத்தில் விற்று தீர்ந்துள்ளது.இந்நிலையில் டிக்கெட் விற்பனை துவங்கிய சில நிமிடங்களிலே விற்று தீர்ந்ததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இந்நிகழ்ச்சியின் மீது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.