மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் தன் இசையால் ரசிகர்களின் மனதை வருட துவங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக அப்பணியை சிறப்பாக செய்து வருகின்றார். தன் இசையில் கடந்த 30 வருடங்களால ரசிகர்களை கட்டிபோட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் தொடாத உயரம் இல்லை, பார்க்காத வெற்றிகள் இல்லை
இருப்பினும் ஒன்றும் நடக்காதது போல எப்போதும் எளிமையை கடைபிடித்து வரும் ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது ஏ.ஆர் ரஹ்மானுக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உலகப்புகழ் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானை கனடா அரசு கௌரவித்துள்ளது. கனடா நாட்டில், ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் வகையில், மர்காம் நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு ‘ஏ.ஆர் ரஹ்மான்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் ஏ.ஆர் ரஹ்மான்.
அந்த அறிக்கையில், “இதை நான் என் வாழ்நாளில் நினைத்துப் பார்த்ததில்லை. கனடா மக்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.மேலும், “ஏ.ஆர். ரஹ்மான் என்பது பெயரல்ல. அந்த சொல்லுக்கு இரக்கமுள்ளவர் என்று பொருள். இரக்கம் என்பது நம் அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான கடவுளின் குணம். எனவே அந்த பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.” என குறிப்பிட்டு பலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.
Honoured and grateful for this recognition from @cityofmarkham and @frankscarpitti and the people of Canada 🇨🇦 🇮🇳 #arrahmanstreet #markham #canada #infinitelovearr #celebratingdiversity pic.twitter.com/rp9Df42CBi
— A.R.Rahman (@arrahman) August 29, 2022
இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன் ,கோப்ரா ,வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது