ரஜினி தற்போது நெல்சனின் ஜெயிலர் படத்தில் பிசியாக நடித்து வருகின்றார். சென்னையில் மிகப்பெரிய செட்டில் இப்படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
மேலும் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ரஜினி இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் அவரின் 170-வது திரைப்படத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் பரவின.
ஆனால் அது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வரை வரவில்லை. இதற்கிடையே பிரபல நடிகர் அரவிந்த் சாமி சமீபத்தில் அவர் அளித்திருந்த பேட்டியில் தலைவர் 170-ல் அவர் நடிக்கிறாரா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் மறைமுகமாக பதிலளித்து இருக்கிறார்.

இதனால் தற்போது அவரும் அப்படத்தில் நடிக்கலாம் என தகவல் வருகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்த தளபதி படத்தின் மூலம் அரவிந்த் சாமி நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.