Skygain News

தளபதி 67 படத்தில் இத்தனை வில்லன்களா..? வெறித்தனமான வெய்ட்டிங்கில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் கிளாசிக் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . மாஸ்டர் என்ற பிரமாண்ட ஹிட் படத்திற்கு பிறகு தளபதி 67 படத்தில் மீண்டும் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைய உள்ளது .

இப்படத்தில் விஜய்யுடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல தென்னிந்திய நடிகை திரிஷா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது. அதே போல், விஜய்க்கு எதிரான வில்லி கதாபாத்திரத்தில் சமந்தா கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது .

இதை தொடர்ந்து இப்படத்தில் மொத்தம் 6 வில்லன்கள் என்றும், அதில் சஞ்சய் தத் மற்றும் பிரித்விராஜ் இதுவரை தேர்வாகியுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மூன்றாவது வில்லனாக பிரபல நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். ஏரக்குறைய அந்த பேச்சுவாத்தையில் அர்ஜுன் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது .

இதையடுத்து தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் இறுதி வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதுவரை எந்த ஒரு விஜய் படத்திலும் சேராத இப்படியொரு பிரமாண்ட கூட்டணி தளபதி 67 படத்தில் சேரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More