சின்னத்திரையில் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இன்று தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் தான் அருண்ராஜா காமராஜ். நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான அருண் ராஜா காமராஜ் அவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்.
அப்போதிலிருந்தே நெருங்கிய நண்பர்களான இவர்கள் ஒன்றாக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்துள்ளனர். மேலும் இருவரும் இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினர்.
பின்பு சிவகார்த்திகேயன் நடிக்க வந்த பிறகு அருண் ராஜா காமராஜ் பாடல்கள் எழுதுவதில் கவனத்தை செலுத்தினார்.இந்நிலையில் கடந்தாண்டு அருண் ராஜா காமராஜின் மனைவி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
இதன் காரணமாக மனமுடைந்த அருண் ராஜா காமராஜ் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு தற்போது திரும்பியுள்ளார்.இந்நிலையில் அருண் ராஜா காமராஜின் மனைவி உயிரிழந்து ஒரு வருடமே ஆகும் நிலையில், அக்டோபர் 28 ஆம் தேதி… இவருக்கு இரண்டாம் திருமணம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இவர் தன்னுடைய திருமணம் குறித்த தகவலை வெளியிடுவார் என கூறப்படுகிறது.