தமிழ் சினிமாவில் வெற்றிக்காக தொடர்ந்து போராடி இன்று முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் அருண் விஜய். என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு அவரின் திரைப்பயணத்தில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தன் ஒவ்வொரு படத்தையும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகண்டு வருகின்றார் அருண் விஜய்.
அந்த வகையில் யானை என்ற வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் சினம் படம் வெளியாகிவுள்ளது. குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சினம் திரைப்படம் ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
இயக்குநர் குமரவேலன் இந்தப் படத்தின்மூலம் சிறப்பான போலீஸ் கதையை கொடுக்க முயற்சித்துள்ளார். ஓரளவுக்கு வெற்றியும் கண்டுள்ளார். படத்தில் ஷபீர் இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. மொத்தத்தில் அதிகமான வன்முறை போன்றவை இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும்வகையில் படம் அமைந்துள்ளது.

மேலும் அருண் விஜய்யின் மிடுக்கான நடிப்பு, சிறப்பான திரைக்கதை, ஒளிப்பதிவாளரின் சிறப்பான காட்சி அமைப்புகள், சிறப்பான பிஜிஎம், நாயகி பல்லக் லால்வானியின் க்யூட் நடிப்பு மற்றும் குழந்தை என இந்தப் படத்தில் அதிகமான ப்ளஸ்கள் காணப்படுகின்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு சமூக மெசேஜுடன் வெளியாகியுள்ள போலீஸ் கதை என்ற வகையில் இந்தப் படம் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே யானை படத்தை தொடர்ந்து சினம் திரைப்படமும் அருண் விஜய்க்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.