பிக் பாஸ் சீசன் 6 துவங்கிய சில நாட்களிலேயே இந்நிகழ்ச்சி சூடு பிடிக்க துவங்கியது. இந்த சீசனில் சாமானியர்களில் ஒருவராக தனலட்சுமி போட்டியாளராக பங்கேற்றார். போட்டி ஆரம்பமான முதல் வாரத்திலேயே ஜி.பி.முத்துவுடன் சண்டையில் ஈடுபட்டார் தனலட்சுமி.
இந்நிலையில் தற்போது அவர் அசலிடம் சண்டையிட்டது தான் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.கடந்த சில நாட்களாக அசல் கோளாரின் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது. அவர் பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறார் என்பது மக்களின் பெரிய கோபமாக உள்ளது.
இந்த நேரத்தில் வேறொரு விஷயம் நடந்துள்ளது.பெண்களிடம் சிலுமிஷம் செய்துவரும் அசல் கோளாறு தனலட்சுமியை பார்த்து உருவ கேலி செய்துள்ளார். ஆண்ட்டி, பெரியம்மா என அவர் கூறியதை கேட்டு கோபம் அடைந்த தனலட்சுமி அசலிடம் கடுமையாக சண்டை போட்டுள்ளார்.
Fight 😳 #GPMuthu #GPMuthuArmy #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/TtayP83NwQ
— GP Muthu Army (@drkuttysiva) October 19, 2022
இந்நிலையில் ரசிகர்களை எரிச்சலடைய செய்த அசலை தனலட்சுமி வெளுத்து வாங்கியது ரசிகர்களின் ஆதரவை தனலஷ்மிக்கு ஈட்டிக்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.