Skygain News

நிவிஷாவை கடித்த அசல்..விட்டு விளாசும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கி கிட்ட தட்ட இருபது நாட்கள் ஆகிவிட்டன. கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் வித்யாசமான மற்றும் ஸ்வாரஸ்யமான போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற போட்டியாளரான ஜி.பி.முத்து தன் மகனை பிரிந்து இருக்க முடியாதென கூறி தானாக வெளியேறினார்.

இதன் காரணமாக ஜி.பி.முத்துவின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். இது ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம் இந்நிகழ்ச்சி சண்டைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் செல்கின்றது.

இந்நிலையில் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வரும் போட்டியாளராக அசல் கோலார் இருக்கின்றார்.இந்நிலையில் இவர் பெண்களிடம் நடந்துகொள்ளும் விதம் தான் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கின்றது. குயின்சி, மஹேஸ்வரி என பெண் போட்டியாளர்களை இவர் தொட்டு தொட்டு பேசுவது ரசிகர்களை கடுமையான கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இவரை இச்செயலுக்காக வீட்டை விட்டு வெளியேற்றுமாறு ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது அசல் நிவாவிடம் நடந்துகொண்ட விதம் மேலும் ரசிகர்களை வெறுப்பேற்றுயுள்ளது.

இது குறித்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில், நிவாவின் தோலை கடித்து திணறுவது போலவும், கைகளை கடித்து திணறுவது போலவும் ஆக்ஷன் செய்கிறார். பசிக்கிறது என்பதை நிவாவிடம் சொல்ல தான் இப்படி செய்கிறாராம். இது குறித்த வீடியோ இதோ…

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More