பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவாஷினி மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் இதுவரை ஜி.பி.முத்து மற்றும் ஷாந்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.இந்நிலையில் இந்த வாரம் அசல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.பிக்பாஸ் வீட்டில் அசல் கோலார் ரசிகர்களிடம் ஏடாகூடாமான பிரச்சனைகளில் சிக்கி வந்தார்.
அவரது நடவடிக்கைகள் குறிப்பாக பெண்களிடம் அவர் நடந்துகொள்ளும் விதம் இணையத்தில் கடும் விவாதங்களை கிளப்பியது. பெண் போட்டியாளர்களிடம் அசல் முகம் சுளிக்கும் வகையில் நெருங்கி பழகி வருவதாகவும், இதனை கமல் தட்டி கேட்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆகியுள்ளார் அசல் கோலார். வெளியில் வந்ததும் அவரிடம் பேசிய கமல், நீங்க வந்த நோக்கம் நிறைவேறுச்சா என கேட்டார். இதற்கு பதிலளித்த அசல், இல்லை சார். இன்னும் பேலன்ஸ் இருக்கு. இன்னும் பண்ணிருப்பேன். பண்ண வரை சந்தோசம் என கூறியுள்ளார்.