பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் ஒட்டுமொத்த ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்த போட்டியாளராக அசல் கோலார் மாறியுள்ளார்.அவர் பெண்களிடம் நடந்துகொள்ளும் விதம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க செய்கின்றது.இதன் காரணமாக அவரை வீட்டை விட்டு வெளியேற்றவேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தற்போது மேலும் ஒரு வீடியோ வெளியாகி ரசிகர்களின் வெறுப்பை அதிகரித்துள்ளது.அதில் நிவாஷினியை பின்னால் இருந்து குறுகுறுவென பார்க்கும் அசல், அவரது முதுகில் கையை வைக்கிறார்.இதனால் அவரை திரும்பி பார்க்கும் நிவாஷினியிடம், உதட்டைக்கடித்துக் கொண்டு உன்னை பார்க்கும் போது அப்படியே ஒரு மாதிரி ஆகிறது என கூறி அவரை அணைத்தப்படி அழைத்து செல்கிறார்.
#Kolaru kaalai Silmisham 🤷🏾♂️
— VCD (@VCDtweets) October 27, 2022
Emotion a Control panra..🤣🤦🏾♂️#BiggBossTamil6 #AsalKolar #Nivaa #BiggBossTamil #BBTamil #AsalKolaar #Nivaashiynipic.twitter.com/iCIZ3X6kZa
இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் இவரை இந்த வாரமே வீட்டை விட்டு வெளியேற்றுமாறு கூறிவருகின்றனர்