பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் செல்கின்றது.சண்டைகள் ,சர்ச்சைகள் ,காதல் என கமர்ஷியல் கலவையாக இந்த சீசன் செல்வதால் ரசிகர்கள் ஆர்வமாக பார்த்துவருகின்றனர்.
இந்நிலையில் இதுவரை ஜி.பி.முத்து ,ஷாந்தி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.இதையடுத்து இந்த வாரம் அசல் கோலார் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.ரசிகர்களின் வெறுப்பை அதிகமாக சம்பாதித்த போட்டியாளராக அசல் இருந்து வந்தார்.
காரணம் அவர் பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் நடந்து கொண்ட விதம் தான். எல்லோரிடமும் தவறாக நடந்துகொள்ள மக்களுக்கு அது மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.இதனால் மக்கள் கோபத்தில் அவரை வீட்டைவிட்டு வெளியேற்றினர்.

தற்போது 21 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்த அசல் கோளாறுக்கு ஒரு நாளைக்கு ரூ. 15 முதல் ரூ. 17 ஆயிரம் வரை சம்பளம் என கூறப்படுகிறது. அதன்படி மொத்தமாக அசல் கோளாறு ரூ. 3 லட்சத்து 36 ஆயிரம் சம்பளமாக பெற்றிருக்கலாம் என் தகவல்கள் தெரிவிக்கின்றன.