பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பெண்களிடம் அசல் தவறாக நடந்துட்டுக்கொண்டதாக பலராலும் கூறப்பட்டது.இதைப்பற்றி அசல் தற்போது பேசியுள்ளார்.அவர் கூறியதாவது ,“நான் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதும் எனது குடும்பத்தினருடன் எப்படி இருப்பேனோ அப்படி தான் இருந்தேன்.
மீம்ஸ்களில் வருவதைப் போல் நான் தப்பான எண்ணத்துடன் நடந்துகொண்டிருந்தால் அது உள்ளே இருக்கும் சக போட்டியாளர்களுக்கே தெரிந்திருக்கும். அப்படி தெரிஞ்சிருந்தா அவர்கள் அமைதியாக இருந்திருப்பார்களா.
பிக்பாஸ் வீட்ல அவ்ளோ கேமரா இருக்கிறது. அதற்கு மத்தியில் இதுபோன்ற செயல்களில் வேண்டுமென்றே ஈடுபடுவார்களா. நான் தெரிஞ்சு செய்யாத ஒரு விஷயத்தை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. பார்ப்பவர்களுக்கு அது தவறாக தெரிந்திருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
பிறந்ததில் இருந்தேன் என்னுடைய குணம் அப்படித்தான். அது பிறருக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நான் மாற்றிக்கொள்ள முயல்கிறேன்” என கூறினார்.