பிக் பாஸ் சீசன் 6 துவங்கிய சில நாட்களிலேயே சூடு பிடிக்க துவங்கியது. வழக்கம் போல இந்த சீசனிலும் விதவிதமான போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற போட்டியாளராக ஜி.பி.முத்து இருந்து வந்தார்.ஆனால் தன் மகனை காண வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஜி.பி.முத்து.
இதையடுத்து முதல் போட்டியாளராக ஷாந்தி குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் மக்கள் விரும்பிய சில போட்டியாளர்கள் இருக்கிறார்கள், இதில் இருந்து யார் வெளியேறுவார் என்பது தெரியவில்லை, ஆனால் ஓட்டிங் விவரம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இந்த வாரம் எலிமினேஷனுக்காக ரச்சிதா, ஜனனி, அசல், மகாலட்சுமி, ஆயிஷா, அசீம், ஏடிகே என 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் இப்போது வரை குறைவான வாக்குகள் பெற்று கடைசியில் இருப்பது அசல்.

இவர் மீது கடந்த சில நாட்களுக்கு மக்களுக்கு கோபம் தான் ஏற்பட்டுள்ளது, பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறார் என்ற குற்றச்சாட்டு எழும்ப, அவருக்கு வாக்குகளும் குறைவாக வந்துள்ளது.மேலும் இவர் வீட்டை விட்டு வெளியேறுவதை காண பல ரசிகர்கள் ஆவலாக இருப்பதாகவும் தெரிகின்றது