பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பமான நாள் முதலே சுவாரஸ்யமாக செல்வதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதில் சில போட்டியாளர்கள் ஒரே வாரத்தில் ரசிகர்களின் ஆதரவை பெற்றார்கள். அதில் மிக முக்கியமானவர் ஜி.பி.முத்து. ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வந்த ஜி.பி.முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.இதைத்தொடர்ந்து ஷாந்தி குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.
மேலும் அசல், ஷெரினா, மஹேஸ்வரி ஆகியோர் இதுவரை வெளியேற்ற பட்டனர். இவர்களில் ரசிகர்களின் வெறுப்பை அதிகமாக பெற்ற போட்டியாளராக அசல் இருந்தார்.அசல் கோளாறு, நிவாஷியிடம் எல்லை மீறியதாக நினைத்த ரசிகர்கள் அவரை எவிக்சனுக்குள் தள்ளிவிட்டனர். இதனால் சாந்தியை தொடர்ந்து இரண்டாவது வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அதன் பின்னர் அவர் மீதான விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த அசல், நான் எப்போதும் போல இயல்பாகவே இருந்தேன். நிவாஷினியிடம் நான் நெருங்கி பழகியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் கொடுத்தார். மேலும், நான் எப்போதும் எனது இயல்பை இழக்க மாட்டேன் எனவும் நேர்மையாக பதிலளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதைத்தொடர்ந்து தற்போதுஅசால் கோலார் வைல்ட் கார்டு எண்ட்ரியாக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இருப்பினும் நிவாஷினி வீட்டை விட்டு வெளியேறினால் மட்டுமே அசல் உள்ளே செல்வார் என்றும் ஒரு தகவல் பரவி வருகின்றது