தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் அசோக் செல்வன். பில்லா 2 படத்தில் இளம் வயது அஜித்தாக நடித்து திரையுலகில் அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து சூதுகவ்வும், பீட்சா-2, தெகிடி என வித்தியாசமான கதையம்சம் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.இந்நிலையில் திருமணம் பற்றி பேசிய அசோக் செல்வன் ,வீட்டில் இப்போதைக்கு கல்யாண பேச்சு இல்லை, ஆனால் எனக்கு அரேஞ்ச் மேரேஜ் செட்டாகாது என்று தான் தோன்றுகிறது.

அதே போல பல ஹீரோயின்களுடன் இணைந்து நடித்திருந்தாலும், இதுவரை எந்த நடிகையும் நான் காதலிக்கவில்லை என்றார்.மேலும் பேசிய அவர் கிராமத்து கதையில் நடிக்க வேண்டுமென எனக்கும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு படத்தில் பேசி வருகிறோம் விரைவில் கிராமத்து கதை அம்சத்தை கொண்ட கதையில் என்னை பார்க்கலாம் என்றார் அசோக் செல்வன்.