Skygain News

ஒக்கூர் அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா..! ஏராளமான பக்தர்கள் தரிசனம்…

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் மிகப் பழமையான திருக்கோவிலில் அருள்பாலிக்கும் முத்துமாரியம்மன் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முருகப் பெருமான் ஆகிய சன்னதிகள் புனரமைத்து திருப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து கும்பாபிஷேகம் நடந்தன கணபதி ஹோமத்துடன் நான்கு கால யாக பூஜைகள் துவங்கியது கோவில் முன்பு பிரம்மாண்ட யாகசாலை அமைத்து புனித நீர் நிரப்பப்பட்ட நவ கலசங்களை வைத்து யாக குண்டம் அமைத்து விக்னேஸ்வர பூஜையுடன் யாக பூஜைகள் துவங்கியது தொடர்ந்து நவக்கிரக ஹோமம் வாஸ்து சாந்தி திருமுறை பாராயணம் மற்றும் தேவப்பிரதிஷ்டை பூஜைகள் நடைபெற்று யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் பட்டு சேலைகள் பூ மாலைகள் சமர்ப்பித்தனர பின்னர் பிரதான கலசத்திற்கு உதிரிப்பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்து மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டனர் இதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்து மூலவர் விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டன இதனை அடுத்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டன தொடர்ந்து மூலவர் முத்து மாரியம்மன்க்கு கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முத்துமாரி அம்மனை வழிபட்டனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More