இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பயிற்சி போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் செய்த விஷயங்கள் சுவாரஸ்யத்தை கொடுத்துள்ளது.
தமிழக வீரர் அஸ்வின் பந்துவீச வரும் போது, தினேஷ் கார்த்திக் தொடர்ச்சியாக தமிழில் ஐடியா கொடுக்க, அதற்கு அஸ்வினும் பதில் கொடுத்த ஆடியோக்கள் ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.
அஸ்வினின் ஓவரில் பேசிய தினேஷ் ” பந்து ரிலீஸ் பன்னும் போது கைய மாத்து, அவன் ஈசியா கண்டு புடிச்சி அடிக்கிறான், மாத்திப்போடு, எனக்கூற இதுக்கு பதில் கொடுத்த அஸ்வின், ” இதுமாறி மேட்ச்ல தான் ட்ரை பண்ணி பார்க்க முடியும், பார்ப்போம் எனக்கூறினார். தொடர்ந்து பேசிய தினேஷ், ” அவன் கொஞ்சம் அடிச்சு ஆடட்டும், நீ குத்திப்போடு, வேகமா போடு என தொடர்ச்சியாக தமிழில் அவர் பேசியது சுவாரஸ்யத்தை கொடுத்தது.

இதே போல் தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல் போட்டிகளிலும் தமிழில் பேசியது செம வைரலானது குறிப்பிடத்தக்கது