இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.இவரை ஒரு ரசிகர் சாம்பார் என விமர்சிக்க அஸ்வின் அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.நெட்டிசன் ஒருவர் அஸ்வினிடம் அண்ணா ஒரு பிளேட் இட்லி சாம்பார் என்று பதிவிட்டு இருந்தார்
. இதற்கு தக்க பதிலடி தரும் அஸ்வின் “vada “என்று கேள்விக்குறி போட்டு இருக்கிறார். இதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளது. ஒன்று கேள்வி கேட்டவர் தன்னுடைய ப்ரொபைல் பிக்சராக ரோகித் சர்மாவின் படத்தை வைத்துள்ளார்.

ரோகித் சர்மாவை நெட்டிசன்கள் வடபாவ் உடன் ஒப்பிட்டு கிண்டல் செய்வது வழக்கம். இன்னொன்று வட இந்தியர்களை அந்த வார்த்தை குறிக்கும்.இதை மனதில் வைத்து அஸ்வின் ஒரே வார்த்தையால் அந்த ரசிகரை ஆப் செய்துள்ளார். இதற்கு தமிழக ரசிகர்கள் வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள்.