ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் 27ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குவதாக உள்ளது. ஆசிய கோப்பையில் இந்திய அணி வரும் 28ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்ள போகிறது. இதற்காக இந்திய அணியினர் ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு சென்றுள்ள நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டிற்கு தீடிரென கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லமுடியவில்லை. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதின் காரணமாக அவர் ஓய்வு பெரும் அளவிற்கு சூழ்நிலை உண்டாகிவிட்டது.
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ‘விவிஎஸ் லட்சுமண்’ நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே தொடரில் விளையாட சென்ற இந்திய அணியுடன் ராகுல் டிராவிட் செல்லவில்லை. அந்த தொடரிலும் லட்சுமண் பயிற்சியாளராக பணியாற்றினார். ராகுல் டிராவிட் கொரோனா தொற்றில் இருந்து மீண்டால், ஆசிய கோப்பை தொடரில் அணியுடன் இணைய வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
