கடந்தாண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா. இப்படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்க ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்திருப்பார். இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியானது.
என்னதான் படத்திற்கு கலவையான விமர்சனங்களை கிடைத்தாலும் வசூலில் அடித்து நொறுக்கியது புஷ்பா. மேலும் இப்படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா ஆடிய கவர்ச்சி ஆட்டம் ஹைலைட்டாக அமைந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முன்னதாக கேஜிஎப் 2 படத்தை பார்த்த பின்னர் புஷ்பா 2வை பிரமாண்டமாக எடுக்க எண்ணிய இயக்குனர் சுகுமார் சற்று காலதாமதம் செய்திருந்தார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இதில் விஜய் சேதுபதி இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதா கூறப்பட்டது என தகவல் பரவி வருகிறது. இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் புஷ்பா 2வில் சாய்பல்லவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் பழங்குடியின பெண்ணாக அவர் நடிப்பார் எனவும் தகவல் கசிந்துள்ளது. அதோடு படத்தின் கதையில் அவரது கதாபாத்திரம் மிக முக்கியம் வாய்ந்ததாகவும் இருக்குமாம். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்பாகமும் முதல் பாகத்தை போலவே வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது