வாழ வைத்த தெய்வம் என்கிற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் வசனகர்த்தா ஆரூர் தாஸ்(91) காலமானார். வயது மூப்பின் காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை 6:40 மணியளவில் காலமானார். பாசமலர் படத்தில் மூலம் மிகப் பிரபலமானார். எம்ஜிஆ,ர் சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல ஏராளமானோர் படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். மேலும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இவர் கதை, வசனம், திரைக்கதை அமைப்பில் நிறைய படங்கள் வெளிவந்துள்ளன.

விதி படத்தின் வசனம் மூலம் மிகவும் பிரபலம் பெற்றிந்தார். ஒரு காலத்தில் டப்பிங் படங்களுக்கு பெரும்பாலும் வசனம் எழுதியவர் ஆரூர் தாஸ்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திரைத்துறையில் இவரது சாதனையை கௌரவிக்கும் விதமாக கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். ஆரூர்தாஸ் இல்லத்திற்கு நேரில் சென்று இந்த விருதை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

ஆரூர் தாஸ் மறைந்த காரணத்தினால் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இன்று நண்பகல் 12 மணி அளவில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.