மகளிர் டி20 உலககோப்பையின் 11 வது லீக் போட்டியில் குரூப்-ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இழக்கை எட்டியது. இதன் மூலம் 6 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது. மகளிர் டி 20 உலக கோப்பை போட்டியில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதவுள்ளன. கேப்டவுனில் நடைபெறும் இந்த இரண்டு போட்டிகளையும் இந்திய நேரப் படி மாலை 6.30 மணிக்கும், இரவு 10.30 மணிக்கும் கண்டு களிக்கலாம்.
