Skygain News

Hari Balachandar

10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

மகளிர் டி20 உலககோப்பையின் 11 வது லீக் போட்டியில் குரூப்-ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இழக்கை எட்டியது. இதன் மூலம் 6 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது. மகளிர் டி 20 உலக கோப்பை போட்டியில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. …

10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி..! Read More »

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி வீரர் நீக்கம்? 2வது டெஸ்டில் தொடக்கமே பின்னடைவு!

ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முக்கியமான மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது.ஸ்ரேயாஸ் ஐயருக்கு அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் வழி விட்டுள்ளார். முதல் டெஸ்டில் அறிமுகமான சூர்யகுமார் வெறும் 8 ரன்களை மட்டுமே அடித்து வெளியேறினார். எனவே அவர் இன்னும் சிறிது நாட்கள் வெளியில் அமர வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. சுழற்பந்துவீச்சை பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின் கூட்டணி மீண்டும் சேர்ந்துள்ளனர்.

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை:
விமானத்தில் பறந்த கொள்ளையன்?

திருவண்ணாமலையில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை இந்தியாவிலேயே நடைபெற்றதிலேயே மிகப்பெரிய கொள்ளை சம்பவமாக பார்க்கப்படுகிறது. வெறும் 2 மணி நேரத்தில் 72 லட்சம் ரூபாய் இங்கே கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில்தான் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். குஜராத்திற்கு விமானம் மூலம் தப்பி சென்ற 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  ஹரியானாவை சேர்ந்த கும்பல்தான் இதை செய்தது என்பது உறுதியாகி உள்ளது. 

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து பேசியுள்ளார். சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் பல பிரச்சினைகள் எனக்கும் நடந்துள்ளது. ஹீரோ, டைரக்டர் இவர்கள் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண முடியுமா எனக் கேட்டுள்ளனர். எனக்கு அப்படிபட்ட வாய்ப்புகள் வேண்டாம் என்று மறுத்துவிடுவேன். எந்தவொரு குற்றஉணர்வும் இல்லாமல் இரவில் நிம்மதியா தூங்க வேண்டும். நடிக்க வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டேன் எனக் கூறியுள்ளார். இவர் இவ்வாறு கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் சேர்த்த மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டாகவே சிவகார்த்திகேயன் உள்ளார். பல முன்னணி நடிகர்களின் வாரிசுகள் ஹீரோவான நிலையிலும், சாதிக்க முடியாத இடத்தை சினிமா பேக்கிரவுண்டே இல்லாமல் உள்ளே நுழைந்து தனது பெரும் முயற்சியால் சாதித்து, ஏகப்பட்ட புதுமுக நடிகர்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாகவே மாறிவிட்டார். சினிமாவில் நுழைந்து வெறும் 11 ஆண்டுகளில் தனது கடும் உழைப்பால் வெற்றி, தோல்விகளை சந்தித்து வந்தாலும் துவண்டு விடாமல் போராடி வரும் சிவகார்த்திகேயனுக்கு ஒட்டுமொத்தமாக 110 கோடி சொத்து இருப்பதாக …

சிவகார்த்திகேயன் சேர்த்த மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா? Read More »

உயிருடன் பிரபாகரன்- விரைவில் போட்டோ, அறிக்கை வரும்- காசி ஆனந்தன்…

திடீரென தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன்,தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற தகவலை அவரது குடும்பத்தினரின் அனுமதியுடன் உலகத் தமிழருக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.இந்நிலையில் கவிஞர் காசி ஆனந்தன், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறியது முதல் கட்ட தகவல் மட்டும்தான். பிரபாகரன் உயிருடன் இருக்கும் படங்கள், அவரது குடும்பத்தினர் படங்கள், பிரபாகரனின் அறிக்கை எல்லாம் இனி வெளியாக இருக்கிறது. தமிழீழ விடுதலைப் …

உயிருடன் பிரபாகரன்- விரைவில் போட்டோ, அறிக்கை வரும்- காசி ஆனந்தன்… Read More »

கே.என் நேரு ஒரு கோவக்காரர் – கனிமொழி..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கனிமொழி வாக்கு சேகரித்தார். அப்போது கனிமொழி பேசுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நிச்சயம் திமுக கூட்டணி வெற்றிபெறும். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. மேலும் அமைச்சர் கே.என்.நேருவின் கோபத்தை பற்றி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பலமுறை பேசி இருக்கிறார். அந்தக் கோபம் இன்னும் நிற்கவில்லை. பல நேரங்களில் வைரலாக போகிறது. பொறுமை எல்லாம் ஓரளவுக்கு தான். அதேபோல் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் என்பதால், எதை வேண்டுமானாலும் …

கே.என் நேரு ஒரு கோவக்காரர் – கனிமொழி..! Read More »

பகாசுரனுக்கு அண்ணாமலை வாழ்த்து..!

இயக்குனர் செல்வராகவன் நடிப்பு உலகிற்கு அடியெடுத்து வைக்கும் ‘ பகாசுரன் ‘ படத்தின் மூலம் பிப்ரவரி 17ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. மோகன் ஜி இயக்கத்தில் டிஓபி நடராஜ், ராதாரவி, ராஜன், ராம்ஸ், சரவணன் சுப்பையா உள்ளிட்ட திறமையான நடிகர்கள் நடித்துள்ள படம். இந்நிலையில் பகாசூரன் வெற்றியடைய பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து கூறியுள்ளார். அவரது டுவீட்டில் ‘பகாசுரன் படம் மாபெரும் வெற்றி படமாக அமைய வேண்டும் என்று தனது வாழ்த்துக்களை பட குழுவினருக்கும் இயக்குனர் மோகன் ஜிக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டு …

பகாசுரனுக்கு அண்ணாமலை வாழ்த்து..! Read More »

அனுஷ்காவிற்கு அரிய நோயா?

நடிகை அனுஷ்கா அரிய நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. அனுஷ்கா ஷெட்டிக்கு சிரிப்பு வரும் போது எல்லாம் அவர் 20 நிமிடங்கள் சிரித்துக் கொண்டே இருப்பார். இது அரிதான நோய் என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது. மேலும், இந்த செய்தியை அனுஷ்கா ஒரு தமிழ் பேட்டியில் தெரிவித்தது இருப்பதாக சொல்லி வைரலாகி வருகிறது. ஆனால் இதில் உண்மை இல்லை, இதில் உள்ள உண்மை குறித்து அனுஷ்காவே வெளியில் வந்து விளக்கம் அளித்தால், இந்த செய்தி நிச்சயம் உடைந்து விடும் …

அனுஷ்காவிற்கு அரிய நோயா? Read More »

நீ சரியான ஆம்பளையா இருந்தா? வார்த்தையை விட்ட எடப்பாடி…

ஈரோடு பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 21 மாதமாக மக்களை அமைச்சர்கள் சந்திக்கவே இல்லை. ஆனால் இப்போது தேர்தல் என்றதும் மக்களை சந்திக்கிறார்கள்.நீ சரியான ஆம்பளையா இருந்தா.. மீசை வச்ச ஆம்பளையா இருந்தா.. வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா.. நேரா வெளியே வந்து மக்களை சந்தி என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். இயக்குனர் நவீன் அவரின் இந்த பேச்சு தொடர்பாக போஸ்ட் செய்துள்ளார். அவர் தனது போஸ்டில் ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் …

நீ சரியான ஆம்பளையா இருந்தா? வார்த்தையை விட்ட எடப்பாடி… Read More »