Skygain News

Admin

கண்டெய்னர் லாரியில் கடத்திய ரூ.11 லட்சம் மதுப்பாட்டில்கள் பறிமுதல்..!

தமிழக மதுபான வகைகளை புதுச்சேரியில் போலியாக தயாரித்து தமிழகத்திற்கு லாரியில் கடத்த முயன்ற 11.50லட்சம் மதிப்பிலான சரக்குகளை கலால் துறையினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். தமிழக மதுபான வகைகளை புதுச்சேரியில் போலியாக தயாரித்து தமிழகத்திற்கு கடத்தி வருவதாக புதுச்சேரி கலால் துறைக்கு தகவல் வந்ததை அடுத்து கலால் துறை துணை ஆணையர் உத்தரவின் பேரில் தாசில்தார் மற்றும் கலால் துறை ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு …

கண்டெய்னர் லாரியில் கடத்திய ரூ.11 லட்சம் மதுப்பாட்டில்கள் பறிமுதல்..! Read More »

சிலம்பாட்டம் ஆடி மாற்றுத்திறனாளி மாணவர்களை மகிழ்வித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்..!

விழுப்புரம் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் செஞ்சி வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து மாணவர்களுடன் சிலம்பாட்டம் ஆடி மாற்றுத்திறனாளி மாணவர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் …

சிலம்பாட்டம் ஆடி மாற்றுத்திறனாளி மாணவர்களை மகிழ்வித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்..! Read More »

வாலாஜாபேட்டை அருகே ரூ.44 லட்சம் மதிப்பில் பொழுதுபோக்கு பூங்கா திறப்பு..!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 44₹ லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பொது மக்களுக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் பொதுமக்களின் பொழுதுபோக்கு பூங்காவினை அமைச்சர் ஆர் காந்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார் மேலும் பொழுதுபோக்கு பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பொழுதுபோக்கு பயன்பாடு உபகரணங்களை அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டார். இந்த நிகழ்வின்போது ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர …

வாலாஜாபேட்டை அருகே ரூ.44 லட்சம் மதிப்பில் பொழுதுபோக்கு பூங்கா திறப்பு..! Read More »

விருதுநகரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்..!

விருதுநகரிலிருந்து வடமலைகுறிச்சி செல்லும் சாலையில் சிவஞானபுரம், சின்ன மூப்பன்பட்டி, பாண்டியன் காலனி, கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மதுரை நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வடமலைக்குறிச்சி செல்லும் சாலைக்கு செல்வதற்கு முறையான அணுகு சாலை இல்லாத காரணத்தால் தேசிய நெடுஞ்சாலை எதிர் புறத்தில் பயணிக்கும் சூழ்நிலை இருப்பதால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்தும் உயிர் பலியும் ஏற்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் …

விருதுநகரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்..! Read More »

திண்டிவனம் அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்..!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஏப்பாக்கம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் இருந்து அதிக அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திண்டிவனம் சென்று கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் திண்டிவனத்தில் இருந்து ஏப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் தடம் எண் 23 மற்றும் 21 ஆகிய பேருந்துகள் தொடர்ந்து வரவில்லை எனவும், தற்போது வரும் 6பி பேருந்து ஒரு சில நாட்களாக ஏப்பாக்கம் கிராமத்திற்கு வரவில்லை எனவும், மாலை நேரங்களில் …

திண்டிவனம் அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்..! Read More »

புதுச்சேரியின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி திடீர் மரணம்..!

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை என்ற யானை வந்தது. புதுச்சேரியில் உள்ள பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான யானையாக லட்சுமி திகழ்ந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லையாம் . தமிழகத்தில் கோவில் யானைகளுக்கு ஆண்டுதோறும். 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். கரோனா காலத்தில் கோவில் யானைகளுக்கான இந்த புத்துணர்வு முகாம் …

புதுச்சேரியின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி திடீர் மரணம்..! Read More »

காஞ்சிபுரம் பிரசித்திபெற்ற விளக்கொளிப் பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா..!

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற விளக்கொளிப் பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும், பெருமாள் அவதரித்த கார்த்திகை மாதம் திருவோண நட்சத்திரத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம்.அவ்வகையில் இந்தாண்டு தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதையொட்டி கோவிலிருந்து உற்சவர் விளக்கொளிப் பெருமாள் ராஜஅலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூதேவியருடனும்,மரகதவல்லித்தாயாருடனும் அருகிலுள்ள வேதாந்த தேசிகர் சந்நிதிக்கு எழுந்தருளி அங்கு தேசிகருக்கு மரியாதை உற்சவம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து உற்சவர் வேதாந்த தேசிகருடன் பெருமாளும்,தாயாரும் தெப்பத்திற்கு எழுந்தருளி கேடயத்தில் திருக்குளத்தை வலம் வந்தனர். பின்னர் சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டு, வாண …

காஞ்சிபுரம் பிரசித்திபெற்ற விளக்கொளிப் பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா..! Read More »

தேசிய அளவிலான விரல் ரேகை நிபுணர் தேர்வு – தஞ்சை சப்-இன்ஸ்பெக்டர் முதலிடம்!

தேசிய அளவிலான விரல் ரேகை நிபுணர் தேர்வில் தஞ்சையை சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் அமலா தேசிய அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். புதுடெல்லியில் கடந்த மாதம் 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை தேசிய அளவிலான விரல் ரேகை நிபுணர் தேர்வு தேசிய குற்ற ஆவண கூடத்தில் நடைப்பெற்றது. இந்த தேர்வில் தேசிய அளவில் 236 பேரும், தமிழ்நாட்டில் இருந்து 174 பேரும் தேர்வு எழுதினார்கள். இவர்களில் தஞ்சை மாவட்ட …

தேசிய அளவிலான விரல் ரேகை நிபுணர் தேர்வு – தஞ்சை சப்-இன்ஸ்பெக்டர் முதலிடம்! Read More »

மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பு – அலறியடித்து ஓடிய இளசுகள்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரில் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் நேதாஜி இவர் வழக்கம் போல் அலுவலகத்திற்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் கூட்டுறவு சர்க்கரை ஆலை செல்வதற்காக வாகனத்தை எடுத்த போது என்ஜினில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு திடீரென சீட்டுக்கு அடியில் சென்றதை கண்ட நேதாஜி வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு விலகி நின்றுள்ளார் . இதனை அடுத்து மெக்கானிக் ஒருவரின் உதவியுடன் …

மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பு – அலறியடித்து ஓடிய இளசுகள் Read More »

அரகண்டநல்லூர் அருகே சாராய ஊறல் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே தீயிட்டு அழிப்பு..!

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் குற்றச்சன்பங்களை தடுக்கும் விதத்தில் போலீசார் தீவிர வாகன தணிக்கை மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆதிச்சனூர் கிராம எல்லையில் ஆற்றின் கரையோரமாக சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவல் பேரில் அங்கு சோதனை செய்ததில் 500 லிட்டர் சின்டெக்ஸ் டேங்க் மற்றும் நான்கு 200 லிட்டர் பேரலில் சாராயபுரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன மேலும் 25 லிட்டர் சாராயம் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அரகண்டநல்லூர் …

அரகண்டநல்லூர் அருகே சாராய ஊறல் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே தீயிட்டு அழிப்பு..! Read More »