உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு கோலியனூர், பணம் கொப்பம் ஊராட்சி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் த.மோகன், விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன் இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனர். கோலியனூர் கூட்டு சாலையில் தொடங்கிய பேரணி, கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது. கழிவறையை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது குறித்த பதாகை கையில் ஏந்தியவாறு இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் கழிவறையை சுத்தமாக வைப்பது குறித்த உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்

10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி..!
மகளிர் டி20 உலககோப்பையின் 11 வது லீக் போட்டியில் குரூப்-ஏ பிரிவில் ஆஸ்திரேலியா...
Read More