தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையில் தீபாவளியை முன்னிட்டு நூறு நபர்களுக்கு ஒரு ரூபாய்க்கு சட்டை விற்பனை ஆரம்பம் நடைபெற்றது. அய்யம்பேட்டை மதகடி பஜாரில் உள்ள ராஒன் கார்மென்ஸ் என்ற நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையாக ஒரு ரூபாய்க்கு சட்டை விற்பனை துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
ராஒன் கார்மென்ஸ் உரிமையாளர்கள் ரம்யா ராஜேஷ் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இது குறித்து உரிமையாளர் ரம்யா கூறியதாவது, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் பயன்பெறும் வகையில் வருடந்தோறும் அனைத்து சமூக மக்களும் பயன்பெறும் வகையில் பண்டிகை காலங்களில் முதல் நூறுபேருக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டையை விற்பனை செய்கிறோம்.
ஏழை எளிய மக்களும் பண்டிகை காலங்களில் புத்தாடை அணிந்து கொண்டாட வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என தெரிவித்தார். ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை சிறப்பு திட்டத்தில் சட்டை வாங்க சுற்றுபகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர்.