பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன் கோலாகலமாக துவங்கியது. இதில் தற்போது வரை ரசிகர்களின் வரவேற்பை பெற்ற போட்டியாளராக வலம் வருகின்றார் ஜி.பி.முத்து. இதைத்தொடர்ந்து முதல் வாரத்திலே தனலட்சுமி, ஜிபி முத்து இடையே சண்டைகள் தூள் பறந்துள்ளது.
ஜிபி முத்து நடிப்பதாக தனலட்சுமி கூற, நான் நடிக்கிறேனா என கோபமாக கேட்டுவிட்டு கண் கலங்கி அழுதுள்ளார் முத்து. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து அவரது ஆர்மியினர் பலரும் தனலட்சுமி நாமினேஷன் லிஸ்ட்ல வரட்டும் வச்சு செய்யலாம் என காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் நள்ளிரவு நேரத்தில் தனலட்சுமியிடம் பேசும் ஆயிஷா, ஜிபி முத்துவிடம் பெரிய அளவில் எதுவும் ரியாக்ட் செய்யாமல், அவரை திட்டாமல் சரியான நேரத்தில் அவர் செய்வது பிடிக்கவில்லை என கூறி நாமினேட் செய்து விடு என்றும் நமது இடத்தை எப்படி தக்க வைத்துக்கொள்கிறோம் என்பது தான் முக்கியம் என்றும் ஆயிஷா அறிவுறுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.