சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரிக்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து அங்குள்ள காந்தி மண்டபம், கடல்நாடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம்,வான்உயர திருவள்ளூர் சிலை மற்றும் சூரிய உதயத்தை காண்பார்கள் இந்நிலையில் சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதை முன்னிட்டு சபரிமலைக்கு சென்று திரும்பும் ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது.
தமிழ் மாதம் கார்த்தியை முதல் நாளில் கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் புனித நீராடி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மாலை அணிந்தனர், அதன் பிறகு ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்தையும் காண கர்நாடகா,ஆந்திரா, கேரளா,தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்து வருகின்றனர்,ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று திரும்பி விரதத்தை முடிக்கும் வகையில் தென் முனையில் உள்ள கன்னியாகுமரி புனித தீர்த்த கடலில் நீராடி மாலையை இறக்குவது வழக்கம், அந்த வகையில் கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமான குவிந்துள்ளனர் .
இன்று கன்னியாகுமரி கடற்கரையில் அதிகாலையிலேயே காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு களித்தனர் மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் இருந்தனர்.மேலும் கன்னியாகுமரியில் சீசன் தொடங்கியுள்ளது அடுத்து வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், கன்னியாகுமரியும் கலைக்கட்டி உள்ளது