பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான பிரபாஸ். அடுத்ததாக இவர் நடிப்பில் சலார் மற்றும் ஆதி புருஷ் திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதில் ஆதி புருஷ் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பாலிவுட் நடிகை கிருதி சானோன் நடிகர் பிரபாஸுடன் காதலில் விழுந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில், பாலிவுட் திரைப்பட விமர்சகர் ஒருவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பிரபாஸுக்கும் நடிகை கிருதி சானோனுக்கும் மாலாத்தீவில் நிச்சையதார்தம் நடந்து முடிந்துவிட்டது என்று பதிவு செய்துள்ளார்.
இவருடைய பதிவு தற்போது காட்டுதீபோல் பரவி வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை