டி20 உலககோப்பையை 2வது முறையாக இங்கிலாந்து அணி வென்று சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.கடைசி வரை போராடி பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது.இது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியது ,இங்கிலாந்து அணிக்கு என் வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன்.
அவர்கள் சாம்பியன் பட்டத்தை வெல்ல தகுதியான நபர்கள். அவர்கள் கடுமையாக களத்தில் போராடி நெருக்கடி கொடுத்தார்கள்.இந்த தொடரில் நாங்கள் முதல் 2 போட்டியில் தோல்வியை தழுவினோம். ஆனால் அதன் பிறகு அனைத்து போட்டியிலும் வென்று இறுதிப் போட்டி வரை வென்றது மிகவும் சிறப்புமிக்க செயலாக நான் கருதுகிறேன்.
So proud of the way you guys fought and reached till here @TheRealPCB !
— esha (@Ishahahhah) November 13, 2022
You tried so hard and got so far , but in the end?? IT MATTERS, ITTT OFFCOURSE MATTERSSSSS 🫶❤️
Love y'all 💚🇵🇰#EngvsPak #WorldCup2022 #BabarAzam #ShaheenShahAfridi pic.twitter.com/S4iPfZ79bB
என் அணி வீரர்களிடம் இறுதிப் போட்டியில் உங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று கூறினேன்.ஆனால் பேட்டிங்கில் நாங்கள் ஒரு 20 ரன்களை குறைத்து அடித்து விட்டோம் என கருதுகிறேன். இருப்பினும் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் கடுமையாக போராடினார்கள் என்றார் பாபர்