Skygain News

மிகவும் ஏமாற்றமாக உள்ளது..ஜிம்பாபேவிடம் அடைந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பேச்சு..!

ஆஸ்திரேலியாவில் தற்போது T20 உலகக்கோப்பை நடைபெற்று வருகின்றது. இதில் ஜாம்பவான் அணிகளை கத்துக்குட்டி அணிகள் வீழ்த்துவது தனி சிறப்பாக அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தை அயர்லாந்து அணி வீழ்த்தியது. இதையடுத்து நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்துள்ளது ஜிம்பாபே அணி.

இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 130 என்ற இலக்கை நாங்கள் நிச்சயமாக எட்டி விடுவோம் தான் என்று நினைத்தோம்.ஆனால் எங்களுடைய செயல்பாடு மிகவும் ஏமாற்றத்தை கொடுத்தது. பேட்டிங்கில் நாங்கள் சரிவர விளையாட வில்லை.

எங்கள் அணியில் நல்ல பேட்ஸ்மேன் இருக்கின்றனர் .ஆனால் பவர்பிளேவில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆட்டம் இழந்து வருவது ஏமாற்றத்தை தருகிறது. சதாப் கான் மற்றும் சான் மசூத் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து வந்தனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக சதாப் கான் ஆட்டமிழந்த உடன், அடுத்தடுத்து விக்கெட்டுகளை நாங்கள் பறி கொடுத்ததால் நெருக்கடி எங்கள் அணிக்கு ஏற்பட்டது என்று தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார் பாபர் அசாம்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.