டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை வங்கதேச அணி, இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது.இந்த போட்டியில் இந்தியா வென்றால் மட்டுமே அரை இறுதி சுற்றுக்கு செல்ல முடியும். இந்த போட்டி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த போட்டியை பற்றி பங்களாதேஷ் அணியின் கேப்டன் சாகிப் பேசியுள்ளது, இந்திய அணியை பொறுத்தவரை அவர்கள் உலக கோப்பையை வெல்ல வந்திருக்கிறார்கள்.
ஆனால் நாங்கள் இங்கு உலக கோப்பையை வெல்ல வரவில்லை. உங்களுக்கு சூழ்நிலை புரியும் என நினைக்கிறேன். நாங்கள் இந்தியாவை வீழ்த்தினால் அது மிகப் பெரிய அதிர்ச்சி சம்பவம் ஆகும். அதனால் நாங்கள் நாளை ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்த முயற்சி செய்வோம்.

மேலும் அவர் பேசுகையில் , நாங்கள் எங்களுடைய யுக்திகளை பின்பற்றி விளையாடுவோம். நாங்கள் பேட்டிங், பந்துவீச்சு, ஃபில்டிங் என மூன்று பிரிவுகளிலும் கவனம் செலுத்தி எங்கள் ஆட்டத்தை கவனம் செலுத்த வருகிறோம். எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் நாங்கள் எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம். நாங்கள் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் அது எனக்கு போதும் என்றார் சாகிப்.