விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.இந்த சீசனில் விக்ரமன் அமோகமான வரவேற்பை பெற்று வருகின்றார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விக்ரமன், பிக்பாஸ் வீட்டில் நிதானமானவராக தெரிகிறார்.
சக போட்டியாளர்களுக்கு மரியாதை கொடுத்து வரும் விக்ரம் நியாயத்தையும் பேசி வருகிறார். இதனால் மற்ற போட்டியாளர்களை காட்டிலும் விக்ரமனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பிக்பாஸ் வீட்டில் விக்ரமன் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து சமூக வலைதளங்களிலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விக்ரமனை பார்த்து நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் பயப்படுவதாக கூறியுள்ளார் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

அவர் பேசியிருப்பதாவது, விக்ரமனை பார்த்து கமல் பயப்படுகிறார். எல்லா போட்டியாளர்களையும் எதிர்த்து கேள்வி கேட்கும் கமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகரான விக்ரமனை மட்டும் எதுவும் கேட்காமல் தமாஷாக பேசி வருகிறார். விக்ரமன் ஏதாவது தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்டாமல் ஒதுக்கி வைத்து விடுகிறார் கமல் என கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.