டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறி 3 வாரங்கள் ஓடிவிட்டன. எனினும் அதுகுறித்த விமர்சனங்களும், தோல்விக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளும் இன்னும் நீடித்துக்கொண்டே தான் உள்ளன.கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், தினேஷ் கார்த்திக், முகமது ஷமி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது.
வயதாகிவிட்டதால் இனி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தக்கூறிவிட்டு, ஹர்திக் பாண்ட்யா தலைமையில் முற்றிலும் புதிய படையை உருவாக்க திட்டமிட்டனர்.
இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி புதிய தகவலை கொடுத்துள்ளார். அதில், எந்த ஒரு வீரரையும் ஓய்வு பெறக்கூறி பிசிசிஐ அழுத்தம் கொடுக்காது. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். அவர்களுக்கு ஓய்வு அறிவிக்க விருப்பமில்லை என்றால் ஓய்வு பெற வேண்டாம். ஆனால் டி20 கிரிக்கெட்டில் இனி சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு தரப்படாது என அவர் கூறியுள்ளார்