கண் பார்க்கும் இடமெல்லாம் பரந்த அளவில் பச்சைபசலேன்று இருக்கும் தேயிலைத் தோட்டங்கள் பிரிட்டிஷ் கால பங்களாக்கள் என ரம்மியமாக காட்சியளிக்கிறது மூணாறு , முத்திரப்புழா, நல்லதண்ணி மற்றும் குண்டலா ஆகிய மூன்று மலை கூடும் இடத்தில் கடல் மட்டத்தில் இருந்து 1600 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மூணாறு பகுதி உள்நாட்டு மக்களை மட்டுமல்லாமல் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளையும் பெரிதளவில் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது .
கோடைக்காலத்தின் சுமையைப் போக்கி குளிரை அனுபவிக்க மூணாருக்கு ஒரு முறை பயணித்துப் பாருங்கள். மூணாறில் மேட்டுப்பட்டி அணை, தேவிகுளம், எக்கோ பாயிண்ட், பல இடங்கள் இருந்தாலும் தென் இந்தியாவின் காஷ்மீர் என்று சொல்லப்படும் மூணாறு பகுதியில் நாம் செல்லப் போகக் கூடிய இடத்தைப் பார்க்கலாம்.
சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்:
டாடா டீ அருங்காட்சியகம்
பிளாசம் பூங்கா
ஆனைமுடி சிகரம்
அரையிரங்கல் அருவி
டாப் ஸ்டேசன்
குண்ட்லா ஏரி
மேட்டுப்பட்டி அணை
இரவிக் குளம் தேசிய பூங்கா
ஆனைமுடி
எப்படிச் செல்லலாம்:
தேனியில் இருந்து புறப்பட்டால் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. விமானம் வழியாக செல்ல வேண்டும் என்றால் மதுரை சென்று அங்கிருந்து மாறிச் செல்ல வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கொச்சின் பன்னாட்டு விமானநிலையத்திற்கு வந்து அங்கிருந்து மூணாருக்குச் செல்லலாம்.