தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சி நம் நாட்டு ரசிகர்களுக்கு செட்டாகுமா என கேள்வி கெட்டவர்கள் பலர். இருந்தாலும் அதை தொகுத்து வழங்கிய உலகநாயகன் இந்நிகழ்ச்சியை வேற லெவலுக்கு எடுத்து சென்றார்.
அவருக்காகவே இந்நிகழ்ச்சியை பலர் பார்த்து வருகின்றனர்.இந்நிலையில் பிக் பாஸ் 6 நிகழ்ச்சி விரைவில் துவங்கவிருக்கிறது. முந்தைய சீசன்களையே போன்றே இந்த சீசனிலும் சண்டை, சச்சரவுக்கு குறைவிருக்காது என்று நம்பப்படுகிறது. மேலும் கண்டிப்பாக ஒரு காதல் டிராக்கும் இருக்கும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்நிலையில் போட்டியாளர் ஒருவரின் பெயர் கசிந்துவிட்டது.பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் மைனா நந்தினி கலந்து கொள்வது உறுதியாகிவிட்டதாம். விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார் மைனா நந்தினி.

அவர் தவிர்த்து விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்த வி.ஜே. மகேஸ்வரியையும் பிக் பாஸ் 6 வீட்டில் பார்க்கலாம் என்கிறார்கள். இவ்வாறு விக்ரம் படத்தில் சிறு வேடங்களில் நடித்த இரு நடிகைகள் பிக் பாஸ் போட்டிக்கு வருவது உறுதியாகியுள்ளது.