தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சியில் பிடமனேரி பகுதியில் ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பிடமனேரியில் 1-வது வார்டில் வார்டு கவுன்சிலர் சீனிவாசன் முன்னிலையில் இலக்கியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுதாரமேஷ் அவர்கள் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
இதில் அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டம் ஊராட்சி பொது நிதி மற்றும் 15வது நிதி குழு சார்பில் சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் மற்றும் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை ஊராட்சி மன்ற தலைவர் சுதா ரமேஷ் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் பூங்கொடி ஜம்பு வார்டு உறுப்பினர் விஜயகுமார் ,நாகராஜ் ,தேவேந்திரன் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் 1 வார்டை சேர்ந்த ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.