ராணிப்பேட்டை டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.10.25 கோடி மதிப்பீட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய பேருந்து நிலைய அமைக்கும் பணிக்கு அமைச்சர் ஆர் காந்தி வருகை தந்து பூமி பூஜையை துவக்கி வைத்தார் .
இதையடுத்து அங்கு நடப்பட்ட செடிகளுக்கு அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர், நகர மன்ற தலைவர் உறுப்பினர் என அனைவரும் பாலபிஷேகம் செய்த பின்னர் அமைச்சர் ஆர் காந்தி அடிக்கல் நாட்டினார்.
இந்த பூமி பூஜை விழாவில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் ஜி.கே.உலக பள்ளி மேலாண்மை இயக்குனர் மற்றும் PSK கன்ஸ்ட்ரக்ஷன் ஒப்பந்ததாரர் செல்வம் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.