பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஸ்வாரஸ்யமாக செல்கின்றது.சந்தியாகு பஞ்சமில்லாமல் செல்லும் இந்நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன.இருப்பினும் ரசிகர்கள் ஆவலாக இந்நிகழ்ச்சியை கண்டு வருகின்றனர்.கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இப்போட்டியில் இதுவரை ஜி.பி.முத்து ,ஷாந்தி ,அசல் ,ஷெரினா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
இதில் ஜி.பி.முத்து குடும்பத்தை பார்க்காமல் என்னால் இருக்கமுடியாது என குறி தானாக வெளியேறினார்.இதையடுத்து அசல் ,ஷாந்தி ,ஷெரினா ஆகியோர் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.இந்நிலையில் இந்த வாரம் விக்ரமன், அசீம், ஆயீஷா, மகேஸ்வரி, ராம், தனலட்சுமி, ADK உள்ளிட்டோர் நாமினேட் ஆனார்கள்.
இதிலிருந்து யார் அந்த ஒரு நபர் பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போகிறார் என்று தற்போது தெரியவந்துள்ளது.அதன்படி, பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் போட்டியாளர் ராம் தான் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறப்போகிறார்.

மேலும், நூலிழை வித்தியாசத்தில் இருக்கும் மஹேஸ்வரியும் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கின்றனர்.ஆனால் மஹேஸ்வரி தான் இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்த்த ரசிகர்கள் சற்று ஷாக்காகியுள்ளது குறிப்பிடத்தக்கது