பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட சுவாரஸ்யமாக நகர்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.ஒரு கமர்ஷியல் படங்களுக்கு உண்டான அம்சங்கள் அனைத்தும் இந்நிகழ்ச்சியில் இருப்பதால் ரசிகர்கள் ஆர்வமாக இந்நிகழ்ச்சியை கண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் முக்கியமாக இரண்டு நிகழ்வுகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது.ஒன்று அசல் கோலார் குயின்சியிடம் நடந்துகொண்ட விதம் மற்றும் ஜி.பி.முத்துவை கமல் பாராட்டியது என இரண்டு விஷயங்கள் ட்ரெண்டாகி வருகின்றது.பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் குவின்ஸியிடம் அசல் கோலார் நடந்து கொண்ட விதம் தான் பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
விக்ரமனிடம் குவின்ஸி பேசிக் கொண்டிருந்தபோது அவரின் கையை தடவிக் கொண்டே இருந்தார் அசல்.இது பார்வையாளர்களை எரிச்சல் அடைய செய்தது. இந்நிலையில் இந்த வார இறுதியில் போட்டியாளர்கள் மத்தியில் பேசிய கமல், ஜிபி முத்துவுக்கு ஒரு போஸ்ட் பாக்ஸை அனுப்பினார்.இதனையடுத்து அவருக்கு வந்த சில கலகலப்பான லெட்டரை படிக்கும் நிகழ்வும் நடந்தது.
Dai #Asal ennada panra is this with consent?#biggbosstamil6 #biggbosstamil #biggboss6tamil #GPMuthu #queency pic.twitter.com/oAzb9kDvN6
— Filmic Reels (@filmic_reels) October 16, 2022
எல்லாவற்றையும் தன் பாணியில் ஒரு கலக்கு கலக்கினார் ஜிபி முத்து. இதன் முடிவில் பேசிய கமல், ஜிபி முத்துவை தனக்கு பிடிக்கும் என்றும், அவர் ஒரு பரந்து விரிந்த களம் என்றும், அவருடன் எப்படியும் விளையாடலாம் என்றும் புகழாரம் சூட்டினார். அவர் இந்த பேச்சால் ஆர்மியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.