விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த வாரம் முதல் அமோகமாக துவங்கியுள்ளது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளன. இதனால் இந்த சீசன் எப்படி இருக்கும் என ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
கமலால் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போட்டியாளர்களில் ஜி.பி. முத்து சோஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக உள்ளார்.இந்நிலையில் இந்த சீசனின் முதல் நாமினேஷனை அறிவித்தார் பிக் பாஸ்.இது குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
ஆயிஷாவின் பெயரை தெரிவித்துள்ளார் ராபர்ட் மாஸ்டர். குவின்ஸியை நாமினேட் செய்திருக்கிறார் ஜி.பி. முத்து. தனக்கென்று இரண்டு, மூன்று பேரை வைத்துக் கொண்டு அவர்களிடம் மட்டுமே பேசுகிறார் குவின்ஸி என்கிறார் ஜி.பி. முத்து.மேலும் ப்ரோமோவில் ஜி.பி முத்துவை யாரும் நாமினேட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
#Day8 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/9E1U21ZeCl
— Vijay Television (@vijaytelevision) October 17, 2022