உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாக துவங்கப்பட்டது. வழக்கம் போல் இம்முறையும் வித விதமான போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். இந்நிலையில் போட்டி துவங்கி இரண்டு நாட்களே ஆன நிலையில் ஒரு போட்டியாளர் அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார்.இந்த டாஸ்கில் கலந்துகொண்ட அசல் கோலார், ஆயிஷாவை அழைத்து பேசுகிறார். அப்போது ‘சொல்லு டா’ என்று ஜாலியாக ஆயிஷா கூறியுள்ளார்.இதை கேட்டவுடன் என்ன ‘வாடா போடா’ என்று கூப்பிடாதீர்கள் என கூறிவிட்டார்.
இந்த செயல் ஆயிஷாவிற்கு சங்கடத்தை கொடுத்துள்ளது. இதன்பின், ‘சரி சொல்லுங்க’ என்று ஆயிஷா கூறியுள்ளார். என்ன ‘வாங்க போங்க’ என்றும் கூப்பிடாதீர்கள் என்று அசல் கோலார் கூற மேலும் ஆயிஷாவிற்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது.இதனால் டாஸ்க் முடிந்தவுடன் தனியாக சென்று அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார் ஆயிஷா.

இதன்பின் இந்த விஷயத்தை போட்டியாளர்கள் சில ஆயிஷாவிடமும், அசல் கோலார் இடமும் பேசி முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது இரண்டாம் நாளே போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.