பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம், அசல் கோளாறு, ஆயிஷா, மகேஸ்வரி , சாந்தி, ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, ஜிபி முத்து, தினேஷ், ராம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் விக்ரமன் உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது.இந்நிலையில் இந்நிலையில் இன்றைய ப்ரமோவில் பிக்பாஸ் வீட்டில் ரேங்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் பேசிய அசீம் முதல் இடத்தில் நின்ற மகேஸ்வரி, 6 வது இடத்தில் நின்ற விக்ரமன், 9 வது இடத்தில் நின்ற ஆயிஷா ஆகியோருக்கு சுத்தமாக தகுதியே இல்லை என்றார். இதற்கு விளக்கம் கேட்ட ஆயிஷாவை போடி என்று வசை பாடினார் அசீம்.
தொடர்ந்து வந்த விக்ரமன், என்ன இப்படி பேசுறீங்க என கேட்க, வெள்ளை சட்டை போட்டால் நீ ஒன்னும் டான் ஆயிட முடியாது, போய் வேலைய பாரு என்று அவரிடமும் எகிறுகிறார் அசீம். ஏற்கனவே அசீமுக்கு விக்ரமனை கண்டால் பிடிக்கவில்லை. விக்ரமனிடம் நேருக்கு நேர் பேசாமல் அவாய்டு செய்து வருகிறார் அசீம். இந்நிலையில் ரேங்கிங் டாஸ்க்கில் நடந்துள்ள பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.