பிக் பாஸ் சீசன் 6 துவங்கிய சில நாட்களிலேயே சர்ச்சைக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் செல்கின்றது. நாளுக்கு நாள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் இந்த சீசனில் தற்போது வெளியான ஒரு ப்ரோமோவால் ரசிகர்களின் ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.
அந்த ப்ரோமோவில் விக்ரமனும் ,அஸீமும் கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் விக்ரமன் தன்னிடம் பேச தயங்குவதற்கான காரணம் குறித்து ஹவுஸ்மேட்ஸிடம் பேசிய அசீம், தான் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.
#Day12 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/LtjwX1zi7i
— Vijay Television (@vijaytelevision) October 21, 2022
இதுகுறித்த காட்சிகளெல்லாம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படாவிட்டாலும், லைவ் ஸ்டிரீமிங்கில் ஒளிபரப்பாகி உள்ளன. அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.மேலும் விக்ரமன் நடித்த சீரியல் 40 எபிசோடுகளுடன் முடிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அவன் ஒரு சீரியல் ஆர்டிஸ்ட் எனவும் அந்த வீடியோவில் அசீம் பேசி உள்ளார். இவரின் இந்த பேச்சு ரசிகர்களை வெறுப்படைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
#Azeem all that this video shows is your own incompetence and supreme jealousy on #Vikraman. Ugh !!!pic.twitter.com/iJKUdkeQDn
— Singoolarity (@singoolarity) October 21, 2022