Skygain News

திடீரென மயங்கி விழுந்த அசீம்.பதறிய போட்டியாளர்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் அசீம். விஜய் டிவி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். சீரியல் நடிகர், சின்னத்திரை பிரபலம் என்ற முறையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அசீம், பிக்பாஸ் வீட்டில் எப்போதும் ஹவுஸ்மேட்டுகளுடன் சண்டை போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

டாஸ்க் என்றாலே அசீம் எப்படியும் சண்டை போட்டு விடுவார் என முன்கூட்டியே கணித்து விடுகின்றனர் நெட்டிசன்கள்.இந்த நிலையில், அசீம் மயங்கி விழும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்டன் ஏரியாவில் உள்ள சோஃபாவில் அமர்ந்து கதிரவனுடன் பேசிக்கொண்டிருக்கும் அசீம், திடீரென மயங்கி விழுந்ததை பார்த்து பதறிப்போன சக போட்டியாளர்கள் அவருக்கு முதலுதவி அளிக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. சிலர் அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கமெண்ட் செய்து வந்தாலும், ஏராளமானோர் அசீம் மயங்கி விழுந்ததே நடிப்பு தான் என சாடி வருகின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More