பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடந்த ஸ்வீட் கடை டாஸ்கில் தனலட்சுமி ஒரு டீமிலும் மற்றும் விக்ரமன் ஒரு டீம் ஓனராகவும் இருந்தனர். இந்த போட்டியிலும், ரிசல்ட்டிலும் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக பேசிய கமல், தனலட்சுமியை கண்டித்து அவரின் வெற்றியை பறித்து விக்ரமனிடம் கொடுத்துள்ளார்.
நேற்றைய தினம் இந்த வெற்றி குறித்து பிக்பாஸ் வீட்டில் பேசிய கமல், தனலட்சுமியை கடுமையாக கண்டித்தார். நியாயமான விஷயங்களுக்கு கண்ணீர் சிந்தினால் முதலில் துடைப்பவனாக நான் வருவேன்.
ஆனால் நேர்மையற்ற முறையில் செயல்பட்டு தவறு செய்து கண்ணீர் சிந்தினால் நான் கண்டுகொள்ள மாட்டேன் என்று கமல் காட்டமாக கூறினார். மேலும் அவரது வெற்றியை பறித்து விக்ரமனுக்கு கொடுத்தார்.இதனால் தனலட்சுமி எதுவும் பேச முடியாமல் பாத்ரூம் சென்று கதறி அழுதார்.
If anyone can explain the situation aptly it’s #Ayesha who went thru the same for the past 2 weeks.
— Raja (@whyrajawhy) November 13, 2022
Timely words Aysha. Hope #Dhana can understand and bounce back like you.
Thank you for standing with D in the bad times of her. 👏👏#BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/tnTiQyUAhI
அப்போது ஆறுதல் கூறிய ஆயிஷாவிடம், என் பெயர் கெட்டுவிட்டது, என்னை வெளியில் அனுப்பிவிடுங்கள். எல்லோர் முன்பும் அசிங்கப்படுத்திவிட்டார். நான் யார் காசையும் திருடவில்லை. இது திருட்டு என ஏற்றுக்கொள்ள முடியாது’ என சொல்லி கதறினார். அவரை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.