உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசனை எட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக துவங்கப்பட்டது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் போட்டி துவங்கிய சில நாட்களிலேயே பிரச்சனைகள் மற்றும் சண்டைகள் தலைதூக்க ஆர்மபித்து விட்டது.நேற்றைய எபிசோடில் ஜி.பி.முத்து மற்றும் தனலட்சுமி இடையே நடந்த மோதல் தான் ஹைலைட். பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கிளப் ஹவுஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது.
அதில் ஜிபி முத்து, ஆயிஷா, தனலட்சுமி, ஜனனி ஆகியோர் பாத்திரம் கழுவும் அணியில் உள்ளனர். இதில் உள்ள ஆயிஷா, ஜனனியால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் வீட்டின் வெளியில் உள்ள பெட்டில் தான் தூங்க வேண்டும் என பிக்பாஸ் உத்தரவிட்டார். இதையடுத்து நடைபெற்ற டாஸ்கின் அடிப்படையில் ஆயிஷா, ஜிபி முத்துவை நாமினேட் செய்துள்ளார்.
அதற்கு அவர் சொன்ன காரணம், ஜிபி முத்து பிற அணியினருக்கும் வேலை செய்கிறார் என்பது தான். இதனால் கடுப்பான ஜிபி முத்து வெளியில் அமர்ந்து சக ஆண் போட்டியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அதன்பின்னர் அவருடன் பேசிய தனலட்சுமி, ரொம்ப நடிக்காதீங்க என சொன்னதும், செம்ம டென்ஷன் ஆன ஜிபி முத்து, நான் நடிக்கிறேன்னு நீ பாத்தியா என கேட்க வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் டைனிங் ஏரியாவில் அமர்ந்திருந்த போது இதை நினைத்து கண்கலங்கி அழுதார் ஜிபி முத்து.
Please dont cry😢🥹 #GPMuthu #gpmuthuarmy #biggbosstamil #biggbosstamil6 #biggboss6tamil pic.twitter.com/M0Wy11lkoX
— Filmic Reels (@filmic_reels) October 12, 2022
இதைப்பார்த்த சக போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகின்றது குறிப்பிடத்தக்கது.